GALLERY
22 வருடங்கள் கடந்த திருமண வாழ்க்கை.. இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ் ..

திரைபிரபலங்கள் மற்றும் அரசியல்வாதியான சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் தற்போது தங்களுடைய 22 ஆண்டுகால திருமணபந்த நிறைவை கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தையொட்டி இருவரும் தான் இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்த வாழ்க்கையை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போட்டோவாக பதிவு செய்துள்ளார்.
நடிகர் சரத்குமார், வில்லனாக தன்னுடைய தமிழ் சினிமா கேரியரை துவக்கி ஹீரோவாக, காமெடியனாக, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக பல்வேறு பரிணாமங்களில் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான பல வெற்றிப் படங்கள் ரசிகர்களை இன்றளவும் மகிழ்வித்து வருகின்றன.
நடிகர் எம் ஆர் ராதா மகள் என்ற அடையாளத்தோடு சினிமா துறையில் நுழைந்தார் நடிகை ராதிகா; இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா இணைந்து கலக்கிய திரைப்படங்கள் நம்ம அன்னஞ்சி, நாட்டாமை, சூரியவம்சம், வானம் கொட்டட்டும் போன்றவை.
கடந்த 2001 ம் ஆண்டில் நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார் சரத்குமார். இவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையை மிகவும் அழகாக கொண்டு சென்று வருகின்றனர். இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் உள்ளார்.
தன்னுடைய முதல் மனைவிக்கு பிறந்த வரலட்சுமியுடனும் சிறப்பான உறவை மெயின்டெயின் செய்து வருகிறார் நடிகர் சரத்குமார். தற்போது, 22 ஆண்டுகால வாழ்க்கையில் பல்வேறு தியாகங்கள், புரிதல், மகிழ்ச்சி, துக்கம் உள்ளிட்டவற்றை கொண்ட நீண்ட பயணத்தை கடந்து வந்துள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தற்போது, இவர்களுக்கு திருமண வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இவர்கள் இணைந்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் நெட்டிசென்கள் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்பட போஸ்டிற்கு ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்கு திருமண வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.