தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரின் ஆக்சன் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வெற்றி தான்.

அந்த அளவிற்கு தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படுபவர்.

நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த்.

இந்நிலையில் விஜயகாந்த் மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல இயக்குனரான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறந்த ஹீரோவாக விளங்கிய விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அண்மையில் புத்தாண்டு அன்று தொண்டர்களை சந்தித்த போது மிகவும் மோசமான நிலையில் இருந்தார்.

இதனிடையே விஜயகாந்த் பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் தங்களின் 33வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.

இவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் திருமண நாள் அன்று பட்டு வேஷ்டி சட்டையில் விஜயகாந்த் மாலையும் கழுத்துமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.