TRENDING
‘அயலி’ படத்தில் அம்மாவாக பார்த்த நடிகையா இது..? மாடர்ன் உடையில் சும்மா கலக்குறாங்களே… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த வெப் சீரிஸ்களில் ஒன்று அயலி. இந்த அயலி வெப் சீரிஸில் கதாநாயகியின் அம்மாவாக நடிகை அனுமோல் நடித்திருந்தார்.
வெப் சீரிஸ் ஜீ 5 பிரேமில் ஒளிபரப்பான அயலி வெப் சீரிஸ் தற்போது அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இந்த வெப் சீரிஸ் 8 எபிசோடுகளை கொண்டிருக்கிறது. இதில் கதாநாயகி தமிழ்ச்செல்வியாக அபி நட்சத்திரா நடித்திருக்கிறார்.
அவருடைய அம்மா கேரக்டரில் அனுமோல் நடித்திருக்கிறார். மலையாள நடிகை அனுமோல் மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கண்ணுக்குள்ளே, ராமர் மற்றும் சூரன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் பல்வேறுபட்ட கேரக்டரில் இவருடைய நடிப்பை காட்டி இருக்கிறார்.
இவர் பல்வேறு உயரிய விருதுகளையும் வாங்கி இருக்கிறார். குறிப்பாக இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 1986 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த நடிகை அனுமோல் தனது சிறுவயது முதலே திரைத்துறையில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பு அயலி வெப் சீரிஸில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அனுமோல். தற்பொழுது இவர் மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.