LATEST NEWS
டபுள் சந்தோஷத்தில் ஐஸ்வர்யா ராய் குடும்பம்…. புகைப்படத்துடன் குட் நியூஸ் சொன்ன அபிஷேக்…. வைரல்….!!!!
உலக அழகியாக கடந்த 1994 ஆம் ஆண்டு தேர்வாகி பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றும் பல கோடி சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வந்தார். இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஆரத்யா பச்சன் என்ற மகளைப் பெற்றெடுத்த ஐஸ்வர்யா சினிமாவில் இருந்து சற்று விலகினார்.
சில நாட்கள் கழித்து சினிமாவில் மீண்டும் களம் இறங்கினார். தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நந்தினி கதாபாத்திரம் தனது கனவு வேடம் என்று நடிகை மீனாவும் கூறி இருந்தார்.தமிழர்களால் என்றுமே உலக அழகியாக கொண்டாடப்படும் ஐஸ்வர்யா ராய் இந்த திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு அழுத்தமான இடத்தை பிடித்து விட்டார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிகாரணமாக மிகுந்த உற்சாகத்தில் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது டபுள் சந்தோஷத்தில் உள்ளார். அதாவது இவர் வாங்கியுள்ள ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் என்ற கபடி அணி சமீபத்தில் நடந்த ப்ரோ கபடி லீக்கின் இறுதிப்போட்டியில் புனேரி பல்டன்ஸை வீழ்த்தி கோப்பையை தட்டி தூக்கியதால் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய் மிகுந்த உற்சாகத்தில் உள்ளன. தனது மகளுடன் இருவரும் கோப்பையுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
