LATEST NEWS
அப்ப நார்மல் செக்கப் இல்லையா..? தல அஜித்துக்கு அறுவை சிகிச்சை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

முன்னணி நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். கடந்த சில மாதங்களாக விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அர்பைஜனில் நடைபெற்றது. அதன் பிறகு வானிலை மாற்றம் காரணமாக பட பதிப்பு தள்ளிப்போனது.
இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான லைக்கா வேட்டையன் படபிடிப்பை முடித்துவிட்டு விடாமுயற்சி படத்தினை தொடங்கலாம் என முடிவு செய்திருப்பதாக சில தகவல்கள் வெளியானது. ரசிகர்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நேற்று நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. உடனே அவருக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். முதலில் நார்மல் செக்கப் என்று கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அஜித் மூளையில் ஒரு கட்டி இருந்துள்ளது. சுமார் 4 மணி நேரம் அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த கட்டி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்காக கேரளா மற்றும் மதுரை சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் அஜித்துக்கு சிகிச்சை பார்த்துள்ளனர். தற்போது அஜித் அப்சர்வேஷனல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இன்னும் மூன்று மாதம் அஜித் ஓய்வில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.