TRENDING
‘தாய் மற்றும் தந்தை மாறி மாறி’..!அடித்த இடத்திலே அடி சுருண்டு விழுந்த சிறுவன்! பின் நேர்ந்த பரிதாபம்..?

அமெரிக்காவில் 5 வயது சிறுவன் படுக்கையறையிலேயே சிறுநீர் கழித்ததால், ஆத்திரமடைந்த தந்தை மற்றும் தாய் அடித்துள்ளதால், சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் பெற்ற குழந்தையை தன்னுடைய ஆத்திரத்தில் பலிகொடுத்த பெற்றோர். அமெரிக்காவில், இல்லினாய்ஸ் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூ ப்ரூயண்ட், ஜோயன் குன்னிங்கம் என்ற தம்பதிகளுக்கு ஏஜே என்ற 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் கடந்த மாதம் முன்பு படுக்கையறையிலேயே சிறுநீர் கழித்து இருக்கிறான்.
இதனை பார்த்த தந்தைக்கோ குழந்தை மீது பயங்கர கோபம் ஏற்பட்டு குழந்தையை ஓங்கி அடித்து உள்ளார் அதில் குழந்தை படுகாயம் அடைந்து அச்சாதிவுள்ளது மேலும் தாய் வேலை முடிந்து வந்து பார்த்ததும் அவளும் கோபப்பட்டு அடித்த இடத்துலயே மீண்டும் குழந்தையை வேகமாக அடித்து உள்ளார் . இதனால் பலவீனமாக இருந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து உள்ளது குறிப்பிடதக்கது. குழந்தையின் மரணத்தை அறிந்த பெற்றோர் போலீசுக்கு பயந்து யாருக்கும் தெரியாமல் குழந்தையை வெகுதூரம் கொண்டு வந்து ஒரு காட்டிற்குள் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில புதைத்து விட்டனர்.
சில நாட்கள் கழித்த பின்பு போலீசாருக்கு இந்த விஷயம் தெரியவந்தது, தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.மேலும், கொலை செய்த தாய்க்கு 20 முதல் 60 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த மாதம் தண்டனை வழங்கப்பட உள்ளது. சிறுவனின் தந்தை ஆண்ட்ரூ மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பெற்றோரெ குழந்தையை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியில் உள்ளாகியது.