TRENDING
அம்மாடியோ ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?…. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி வாங்கிய சம்பளம்…. லீக்கான தகவல்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் 60 நாட்களைக் கடந்து தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொரு வாரம் எலிமினேஷன் செய்யப்பட தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன. கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெற்ற நிலையில் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து ஏடிகே வெளியேறுவார் என கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக இலங்கை பிரபலம் ஜனனி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்த ஜனனிக்கு ஒரு நாளைக்கு 21,000 முதல் 26 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.