TRENDING
இந்த வாரம் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அசீம் Vs அமுதவாணன்…. பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்…. வெளியானது இன்றைய முதல் ப்ரோமோ….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த வாரத்திற்கான தலைவர் டாஸ்க் இடம் பெற்றுள்ளது.
அதில் அமுதவாணன் மற்றும் அசீம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவரையும் ஒன்றாக சேர்த்து ஒரு கயிறு கட்டப்பட்டுள்ள நிலையில் தனித்தனியாக ஒரு பெரிய பெட்டியும் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே இருக்கும் கிப்ட்களை எடுத்து அந்த பெரிய பெட்டியில் போட வேண்டும். அதிகமான கிப்டுகளை யார் பெட்டியில் போடுகிறார்களோ அவரே வெற்றியாளர் என்று கூறப்பட்டுள்ளதால் யார் இந்த வாரம் தலைவராக போகிறார் என அனைவரும் விறுவிறுப்புடன் காத்திருக்கின்றனர். அது தொடர்பான ப்ரோமோ என்று வெளியாகி உள்ளது.