பன்முக நாயகன் பாக்கியராஜின் பிறந்தநாள்…. இதுவரை நீங்கள் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ…!! - cinefeeds
Connect with us

GALLERY

பன்முக நாயகன் பாக்கியராஜின் பிறந்தநாள்…. இதுவரை நீங்கள் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ…!!

Published

on

தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், திரைக்கதை அமைப்பாளர், வசன எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் கே.பாக்யராஜ்.

#image_title

அவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் வேலை பார்த்தார். கடந்த 1978-ஆம் ஆண்டு பாக்யராஜ் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.

#image_title

இதனையடுத்து புதிய வார்ப்புகள் படத்தில் பாக்கியராஜ் கதாநாயகனாக அறிமுகமானார். ஒரு கை ஓசை திரைப்படம் பாக்யராஜுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

#image_title

இந்த படத்தில் அஸ்வினி அவருக்கு இணைந்து ஜோடியாக நடித்தார். வாய் பேச இயலாத ஊமை கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

#image_title

இதனையடுத்து பாக்யராஜின் மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றது.

#image_title

இதனைத் தொடர்ந்து டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற வெற்றி படத்தை இயக்கி அதில் நடித்த பூர்ணிமாவை தனது மனைவியாக ஏற்று திருமணம் செய்து கொண்டார்.

#image_title

முக்கியமாக சின்ன வீடு, எங்க சின்ன ராசா , இது நம்ம ஆளு போன்ற திரைப்படங்கள் அவருக்கு விருதுகளை பெற்று கொடுத்தது.

#image_title

பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியினருக்கு சரண்யா என்ற மகளும், சாந்தனு என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

#image_title

பாக்யராஜின் குருவாக பாரதிராஜா திகழ்ந்தார். இதே போல பாக்யராஜும் பாண்டியராஜன், ரா.பார்த்திபன், லிவிங்ஸ்டன், வி .சேகர் ஆகிய வெற்றி இயக்குனர்களை உருவாக்கினார்.

#image_title

இந்நிலையில் சாந்தனு தனது அப்பாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறு வயது முதல் தற்போது வரை உள்ள புகைப்படங்களை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

#image_title

Continue Reading
Advertisement