GALLERY
அடடே.. நம்ம பிக்பாஸ் கேபிக்கு இத்தனை வயசு ஆகிருச்சா..? இன்னும் சின்ன பொண்ணு மாதிரி இருக்காங்களே…!!
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி ஜுனியர் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் கேப்ரியல்லா சார்ல்டன் திரை உலகில் அறிமுகமானார்.
அவர் தனது சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் இறுதி சுற்றில் வெற்றி பெற்று டைட்டிலை வென்றார்.
இதனையடுத்து கேப்ரியல்லாவுக்கு சின்னத்தினை வாய்ப்புகள் வர தொடங்கியது. அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 7c என்ற சீரியலில் பள்ளி மாணவியாக நடித்தார்.
அவரது சிறப்பான நடிப்பும் நடனமும் சினிமா வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக கேப்ரியல்லா சார்ல்டன் நடித்திருந்தார்.
அதன் பிறகு சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இதனையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் கேப்ரியல்லா சார்ல்டன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். ஆனால் இறுதிவரை அவரால் செல்ல முடியவில்லை.
பிக் பாஸ் கொடுத்த ஆஃபரை பயன்படுத்தி ஐந்து லட்ச ரூபாய் உடன் கேப்ரியல்லா சார்ல்டன் போட்டியை விட்டு வெளியே வந்தார். சின்னத்திரை சீரியல்களிலும் ரசிகர்களை தன்வசம் இழுத்தார்.
அதன்படி ஈரமான ரோஜாவே இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். கேப்ரியல்லா சார்ல்டன் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.
தற்போது 24 வயதை எட்டிய கேப்ரியல்லா சார்ல்டன் தனது பிறந்த நாள் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram