TRENDING
முதல் மனைவியுடன் … பாட்டுப்பாடி செம ஹாப்பியாக இருக்கும் D.இமான்… வைரலாகும் வீடியோ…!
இசையமைப்பாளர் டி.இமான் விஜய்யின் தமிழன் படத்தில் தொடங்கி அஜித், ரஜினிகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுக்காக பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்தவர். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனங்கொத்திபறவை படத்திற்கு இசையமைக்க தொடங்கிய இமான் சிவகார்த்திகேயனை தனது தம்பியாக கருதி பல வருடங்கள் குடும்ப நண்பர்களாக இருந்தனர்.
சிவகார்த்திகேயனை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் பாடகராக அறிமுகப்படுத்திய இமான், சிவகார்த்திகேயனுக்கு ரஜினி முருகன், சீமராஜா, நம்ம விதிப் பிள்ளை போன்ற ஹிட் ஆல்பங்களை இறுதிவரை தொடர்ந்து வழங்கினார். ஆனால், திடீரென சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், இந்த ஜென்மத்தில் அவரை மன்னிக்கவே மாட்டேன் என்று அவர் அளித்த பேட்டியின் விளைவால், இமான்-மோனிகா பிரிவதற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று கூறும் நிலையில் தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் பஞ்சுமிட்டாய் படத்திற்காக D.இமான் இசையமைத்துள்ள மை பியுட்டிஃபுல் வைஃப் பாடலை பாடி செம சந்தோஷமாக தன் முதல் மனைவி மோனிகாவுக்கு அர்ப்பணித்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இவ்வளவு மகிழ்ச்சியான வாழ்க்கை ஏன் விவாகரத்தில் முடிந்தது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இமான் தனது முதல் மனைவியை பிரிந்துள்ள நிலையில், இரண்டாவது மனைவியான அமெலியாவை இமான் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/koodaltwitz/status/1717059276399628513?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1717059276399628513%7Ctwgr%5E3665cf43245a766d155f95d46e6ea5761cde7a76%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.filmibeat.com%2Fnews%2Fd-imman-and-his-first-wife-monika-throwback-video-trending-in-social-media-118695.html
