TRENDING
19 வயது இளம்பெண்ணுக்கு முதுகில் இருந்த ஆபத்து ..?? ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்கள் கண்ட அதிர்ச்சி ..!! தீவிர விசாரணையில் காவல்துறையினர் ..??

பெண்ணின் முதுகில் இருந்து துப்பாக்கி குண்டை அறுவைசிகிச்சை செய்து வெளியில் எடுத்த மருத்துவர்கள் . ஹைதராபாத்தை சேர்ந்தவர் அஷ்மா பேகம் (19). இவருக்கு கடந்த ஒரு வருடமாக முதுகு வலி இருந்து வந்தது இவர் அடிக்கடி மருத்துவர்களிடம் சென்று மருந்து எடுத்துக்கொண்டு வந்து இருக்கிறாள் .
ஆனால் இவருக்கு கடந்த சில மாதங்களாக முதுகு வலி அதிகமா இருந்த நிலையில் இவருக்கு ஸ்கேன் எடுத்து உள்ளனர் மருத்துவர்கள் அப்பொழுது மருத்துவர் ஸ்கேனில் பார்த்த அதிர்ச்சி அடைந்தனர் . அந்த இளம் பெண்ணின் முதுகு தண்டுவடத்தில் துப்பாக்கி குண்டு இருந்தது கண்டுபிடிக்க பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அந்த பெண்ணின் குடும்பத்தாரிடம் விசாரணை நடந்து கொண்டு வருகிறது மேலும் அவளின் பெற்றோர்கள் இது எப்படி நடந்தது என்று எங்களுக்கு தெரியாது என்று பதில் அளித்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது .
இந்த நிலையில் நேற்று அந்த இளம் பெண்ணுக்கு முதுகுவலி அதிகமாக உள்ள நிலையில் அவளுக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்து முதுகில் உள்ள குண்டினை வெளியே எடுத்தனர் மருத்துவர்கள்.