14 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்!… இனி தீவிரவாதிகள் தப்பிக்கமுடியாது !….. - cinefeeds
Connect with us

TRENDING

14 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்!… இனி தீவிரவாதிகள் தப்பிக்கமுடியாது !…..

Published

on

ராணுவத்திற்கு பயணப்படும் வகையில் இந்த செயற்கைகோள் வடிவமைக்க பட்டுள்ளது. பிஸ்.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட்டில் வணிக ஏற்பாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோளும் அனுப்பப்பட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட்டானது எக்ஸ் எல் வகையின் 21 ஆவது ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பாய்ந்த 74 ஆவது ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது.கார்ட்டோசாட்-2 அனுப்பிய தேதி இஸ்ரோ முன்னதாகவே கார்டோசாட் 2 செயற்கைகோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து கடந்த 2017 ஆம் வருடம் ஜூன் 23 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.கார்ட்டோசாட்-3 செயற்கைகோளானது பூமியை மிக துல்லியமாக படம் பிடிக்கும். இந்த செயற்கை கோளானது 509 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப் பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலை நிறுத்தப்பட உள்ளது.

இந்த கார்ட்டோசாட்-3 பூமியையும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மிக துல்லியமாக படம் பிடித்து அனுப்பும்.இந்த செயற்கை கோள் ராணுவ அதிகாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செயற்கைகோளின் மூலம் பூமியை துல்லியமாக படம் பிடிப்பதன் மூலம், எதிரிகளின் ராணுவ நிலைகள், பதுங்கு குழிகள், தீவிரவாதிகள் பதுங்கும் இடங்கள், ஆயுதக்கிடங்கு உள்ளிட்டவைகள் எளிதாக கண்டறியமுடியும்.

Advertisement

இஸ்ரோ வரலாற்றில் ஒரே ஆண்டில் ராணுவ பயன்பாட்டிற்கு 3 செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவுவது இதுவே முதன்முறை ஆகும். நாளை செலுத்தப்பட உள்ள ரிசாட் வரிசை செயற்கைகோளுடன் ஜப்பான், லக்சம்பர்க் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் 10 செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in