LATEST NEWS
“காதல் லீலைகள்”…. லவ் லெட்டர் அனுப்பிய 7-ம் வகுப்பு மாணவன்…. முதன்முறையாக மனம் திறந்த நடிகை பூனம் பஜ்வா…. வைரல்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்தான் நடிகை பூனம் பஜ்வா. இவர் முதன்முதலாக 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் மொடடி சினிமா என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் 2008 ஆம் ஆண்டு சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் அடுத்தடுத்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பல படங்களில் நடித்து வந்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு ஆம்பள திரைப்படத்தில் மீண்டும் தமிழ் சினிமாவில் என்று கொடுத்த இவர் அதே ஆண்டு ரோமியோ ஜூலியட், அதரைத் தொடர்ந்து அரண்மனை 2 மற்றும் முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தவித்து வரும் இவர் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் பூனம் பஜ்வா சமீபத்தில் அளித்த பேட்டியில், 7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கு, திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான்.
எனக்கு 21 வயதாகும் வரை காத்திருக்க வேண்டியும், வயது வித்தியாசம் ஒரு பிரச்சனை இல்லை, அதுதான் இப்போது ட்ரெண்ட் என என் அம்மாவை சமாளித்து விட்டேன். திருமணத்திற்கு பிறகும் கிளாமராக நடிக்கலாம் என்று கூறி அந்த மாணவன் எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான். அதற்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கி அப்படியே நான் விட்டு விட்டேன் என பூனம் பஜ்வா இந்த செய்தியை பகிர்ந்து உள்ளார்.
