TRENDING
மேட்டுப்பாளையத்தில் 17 பேரை பலி கொண்டது 20 அடி உயர தீண்டாமை சுற்றுச்சுவர்: மு.க.ஸ்டாலின்!….உரிமையாளர் அதிரடி கைது..!
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக பலியான விவகாரத்தில் சுற்றுச்சுவர் அமைத்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் கிராமத்தில் துணிக்கடை உரிமையாளரின் வீட்டுச்சுவர் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதில் சுவரை ஒட்டி இருந்த 4 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
அப்போது வீட்டிக்குள் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.இதனை அடுத்து சுற்றுச்சுவரை அமைத்த வீட்டின் உரிமையாளரை கைது செய்யக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தனிப்படை அமைத்து வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த சிவசுப்பிரமணியத்தை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.