வைரல் வீடியோ!..’ரஜினி குறித்து சர்ச்சை பேச்சு பாண்டே!.’.. அதிர்ச்சியில் ரசிகர்கள் - cinefeeds
Connect with us

TRENDING

வைரல் வீடியோ!..’ரஜினி குறித்து சர்ச்சை பேச்சு பாண்டே!.’.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published

on

ரங்கராஜ் பாண்டே‘எளிமையான மனிதர் ரஜினியின் எழுச்சி பிறந்த நாள்’ விழாவில் ரஜினிகாந்த் பற்றி வேலூரில் பேசினார். கட்சி வேறு மன்றம் வேறு என்று முதலில் பேசினார். உதாரணமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வேறு; பாரதி ஜனதா கட்சி வேறு என்றும், திராவிட இயக்கம் வேறு; திராவிட கட்சி வேறு என்றும் அவர் பேசினார்.தொடர்ந்து பேசிய பாண்டே, “ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் மாற்றம் வரும் என்று கூறும் எத்தனை பேர், எத்தனை ரசிகர்கள் ரஜினிக்கு உறுதுணையாக நிற்கப் போகிறீர்கள்? என்று கேட்ட ரங்கராஜ் பாண்டே, ரஜினி மக்கள் மன்றம் வேறு ரஜினியின் அரசியல் கட்சி வேறு என்று கூறினார்.

உண்மையில் உங்கள் தலைவர் ரஜினி ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தீர்களேயானால், 234 தொகுதிகளிலும் ரஜினிதான் நிற்கிறார் என்று நினைத்துக்கொள்ள வேண்டும் என்று ரஜினி ரசிகர்களுக்கு, பாண்டே அறிவுரை கூறினார். மேலும் பேசியவர், 2017 பிப்ரவரியில் பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி இன்று இல்லை. அவர் வேறு ஆள், இவர் வேறு ஆள். எடப்பாடி தன்னை வளர்த்துக்கொண்டுவிட்டார். சினிமாவில் ரஜினியை அடித்துக்கொள்ள ஆள் இல்லை; ஆனால் அரசியலில் 100 பேர் அவரை எதிர்க்க தயாராக இருக்கிறார்கள்” என்று பேசினார்.

Advertisement

மேலும் ‘அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து அந்த கட்சித் தொண்டர்களை ரஜினி ரசிகர்களாகிய நீங்கள் ரஜினியின் கட்சிக்குக் கொண்டுவர வேண்டும். அவ்வளவு சவாலான பணிகள் காத்திருக்கின்றன. திரையில் ஒரு பாட்டில் முதலமைச்சர் ஆகிவிடலாம். ஆனால் நிஜத்தில் அப்படி கிடையாது’ என்று பேசிய பாண்டே, விஜயகாந்த் தனது ரசிகர் மன்றத்திலேயே மீனவர் மன்றமெல்லாம் கூட வைத்திருந்தார். இப்படி அரசியலில் பயணித்த முன்னோர்களைத் தாண்டி தனக்கென ஒரு புதிய பாதையில் பயணிக்கக் கூடிய ரஜினி, தொடக்கத்தில், ‘தூத்துக்குடி பிரச்சனையில் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்துவிட்டார்கள்’ தொடங்கி, அண்மையில் அவர் பேசிய ‘அதிசயம் நடந்தது’ வரை, அவர்(ரஜினி) பேசிய அத்தனையுமே வைரலானதாகவும் பாண்டே பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement