TRENDING
‘அலப்பறை தாங்கமுடியால’?……ஆண்மை சோதனை, என்கவுண்ட்டருக்கு பயந்து தனிநாடு ? ஐநாவிடம் நித்தி.. மனுவில் சுவாரசியம்…!
நித்யானந்தாவின் அலப்பறைகள் தாங்கமுடியவில்லை . என்கொண்டருக்கு பயந்து வெளி நாட்டில் செட்டில் அகா திட்டம் . இந்தியாவில் இந்துக்கள் சித்திரவதை செய்யப்படுவதாக ஐநா சபையிடம் திடுக்கிடும் புகார் மனுவை கொடுத்துள்ளார் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா. பலாத்கார வழக்கு, பெண்கள், குழந்தைகள் கடத்தல், நில மோசடிகள் என பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கியவர் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா. இந்த வழக்குகளை எதிர்கொள்ள முடியாமல் நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார் நித்தியானந்தா.
தென் அமெரிக்கா நாடுகளில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என தனிநாடு பெயர் சூட்டியுள்ளார் நித்தியானந்தா. அத்துடன் நிற்காமல் இந்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகிறார் சாமியார் நித்தியானந்தா.தாங்கள் வசிக்கும் நாடுகளில் இந்து மதத்தை பின்பற்ற முடியாதவர்கள் கைலாசா தனிநாட்டில் குடியேறலாம் எனவும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
அத்துடன் அந்த நாட்டுக்கு தனி கொடி, ஆட்சி மொழி என அலட்டல் வேலைகளை காட்டி வருகிறார் நித்தியானந்தா.அவரது அத்தனை நடவடிக்கையுமே தேசதுரோக நடவடிக்கைகள் என்பது அப்பட்டமான ஒன்று. இந்த நிலையில் தங்களது தனிநாட்டை ஐநா சபை அங்கீகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை மனுவை கொடுத்திருக்கிறார் நித்தியானந்தாஅதில் இந்திய அரசு மீது ஏராளமான புகார்களை அடுக்கியிருக்கிறார் நித்தியானந்தா.
இந்தியாவில் இந்துக்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர்; தம்மை ஆண்மை பரிசோதனைக்குட்படுத்தினர் என புகார் கூறியுள்ளார் நித்தியானந்தா.மேலும் தம் மீதான வழக்குகளை ஒப்புக் கொள்ளாவிட்டால் என்கவுண்ட்டரில் தம்மை சுட்டுக் கொல்வோம் என போலீசார் மிரட்டியதாகவும் ஐநாவிடம் அளித்த புகார் மனுவில் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இதனால் தமது கைலாசா தனிநாட்டை உடனே ஐநா அங்கீகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் நித்தியானந்தா.ஐநா சபை உருவான பின்னர் எத்தனையோ தேசங்களில் ஐநாவின் விதிகளுக்குட்பட்ட சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
ஈழத்திலும் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம்தான் நடைபெற்றது. பாலஸ்தீனத்திலும் அதுதான் நடைபெற்றது. பல லட்சம் தமிழர்கள் பலியான நிலையிலும் கூட ஐநாவின் அங்கீகாரம் தமிழீழத்துக்கு கிடைக்கவில்லை. ஆனால் போகிற போக்கில் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுப்பது போல இந்திய அரசு மீது அவதூறு பரப்பி ஐநாவிடம் நித்தியானந்தா புகார் கொடுத்து தனிநாடு கேட்டிருக்கிறார். நித்தியானந்தாவின் சேட்டைகள் அனைத்தும் அவர் மீதான தேசதுரோக குற்றங்களில் அடுக்கடுக்காக இணைகின்றன என்பது சட்டவல்லுநர்களின் கருத்து.