TRENDING
நைஜீரியா நடுக்கடலில் நடந்த அட்டூழியம் 18 இந்தியர்கள் மாயம்…! கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்!

ஹாங்காங் கப்பலில் பணிபுரிந்து வரும் இந்தியர்களை கடல் கொள்ளையர்கள் நடுக்கடலில் மடக்கிப்பித்து கொண்டு சென்றுவுள்ளனர் அதில் இந்தியர்கள் 18 நபர்கள் கடத்தப்பட்டு மயமாகி உள்ளனர், அவர்களை பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவர வில்லை, போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனை , இந்த தகவலை இந்திய தூதுரகம் விவரங்களை உடனுக்குடன் தெரிவித்து வருகிறது.
நைஜீரியா அருகே தென் அட்லாண்டிக் கடற்பரப்பில் ஹாங்ஹாங் கப்பலில் இருந்து 18 இந்தியர்கள் உட்பட 19 பேரை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக நைஜீரியா அரசை தொடர்பு கொண்டு இந்திய தூதரக அதிகாரிகள் விவரங்களை கேட்டு வருகின்றனர்.ஹாங்ஹாங் கப்பல் ஒன்றில் 19 பேர் தெற்கு அட்லாண்டிக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்தனர்.
இதில் 18 பேர் இந்தியர்கள். அப்போது நடுக்கடலில் திடீரென கடற்கொள்ளையர்கள் கப்பலை வழிமறித்தனர்.19 பேருடன் அந்த கப்பலை தங்களது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கடற்கொள்ளையர்கள் கொண்டு சென்றனர். அந்த 19 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை.இந்நிலையில் நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அந்நாட்டு அரசை தொடர்பு கொண்டுள்ளனர். கடத்தப்பட்ட இந்தியர்கள் நிலைமை என்ன என்பதை இந்திய அதிகாரிகள் கேட்டு வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.