வெளியே வந்த உடன் இப்படியா..? பிரதீப் ரெட் கார்டு பற்றிய கேள்விக்கு பூர்ணிமாவின் பதில்.. வைரலாகும் வீடியோ..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

வெளியே வந்த உடன் இப்படியா..? பிரதீப் ரெட் கார்டு பற்றிய கேள்விக்கு பூர்ணிமாவின் பதில்.. வைரலாகும் வீடியோ..!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமாக உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரதீப்புக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தது. ஒவ்வொரு முறையும் நாமினேட் செய்யப்படும்போது ரசிகர்கள் பிரதீப்பை காப்பாற்றி வந்தனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக ரெக்கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். இதற்கு மாயா மற்றும் பூர்ணிமா தான் காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். ஒட்டுமொத்த ரசிகர்களும் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இதனை அடுத்து பிக் பாஸ் டைட்டில் வெளில போவது யார் என்று எதிர்பார்ப்பு இருந்த வந்த நிலையில் பணப்பெட்டி டாஸ்க்கில் 16 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பூர்ணிமா வெளியேறிவிட்டார். அதன் பிறகு ஒரு நிகழ்ச்சியில் பூர்ணிமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பூர்ணிமாவிடம் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த பூர்ணிமா இதைப்பற்றி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேரம் வரும்போது எல்லாருக்கும் எல்லாம் தெரியவரும் என மழுப்பலாக பதில் கூறினார். இது தொடர்பான வீடியோவை பார்த்த மக்கள் இன்னமும் பிரதீப் மீது தான் தவறு என பூர்ணிமா சொல்லிக் கொண்டிருக்கிறாரா என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் பூர்ணிமாவின் மழுப்பலான பதில் பிரதீப்பின் ஆதரவாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement