TRENDING
‘அதிமுக இந்த அமைச்சருக்கு தான் கல்லூரி மாணவிகளை கூட்டி சென்றேன்’ : “நிர்மலா தேவி அளித்த வாக்கு மூலம்”…?

கடந்த வரும் தமிழ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகிய கல்லூரி பெண்களை குறிப்பிட்ட நபருக்கு பாலியல் உறவுக்காக அழைத்து சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
பின்னர் மீண்டும் வழக்கு விசாரணைக்கு சரியான முறையில் ஆஜராகவில்லை என்று மீண்டும் கைதுசெய்யப்பட்டார். இந்தநிலையில் நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கு அதிமுக வருவாய்த்துறை அமைச்சர் R.B.உதயகுமார் தொடர்ந்து கொலை மிரட்டல் செய்துவருகிறார் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியது நிர்மலா தேவிக்கும் அமைச்சர் சார்பில் கொலை மிரட்டல் விடுகிறார்கள் இதில் பயந்து போன நிர்மலா தேவி தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டுள்ளார். அதில் மாணவிகளை யார் தூண்டலின் பெயரில் யாருக்கெல்லாம் பாலியல் உறவுக்காக அழைத்து சென்றார் என்று உண்மையை தெரிவித்துள்ளார்.
அதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித், தமிழக வருவாய்த் துறை அமைச்சர் R.B.உதயகுமார், மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் செல்லதுரை, கலைச்செல்வன், தங்கபாண்டியன் போன்றவர்களுக்கு தான் மாணவிகளை அழைத்து சென்றேன் இந்த உண்மைகளை வெளியே சொன்னால் என் மகளை கடத்திவிடுவதாக மிரட்டல் விடுத்தனர் என்று பேராசிரியர் நிர்மலா தேவி கூறியுள்ளார்
இதேபோல் இந்த வழக்கில் நிர்மலா தேவியின் சார்பாக ஆஜரானதால் எனக்கும் கொலை மிரட்டல் விடுகிறார்கள் இதனால் இந்த வழக்கில் இருந்து விளக்கப்போகிறேன் என்று வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியுள்ளார். இதற்க்கு தமிழக அரசு தான் நல்ல தீர்வு காணவேண்டும் என்று கூறியுள்ளார்.