கனடா பெண்ணிற்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய நித்தியானந்தா !… கண்ணீர் மல்க வீடியோ !…அடுத்தடுத்து வெளிவரும் பகீர் உண்மைகள்… - cinefeeds
Connect with us

TRENDING

கனடா பெண்ணிற்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய நித்தியானந்தா !… கண்ணீர் மல்க வீடியோ !…அடுத்தடுத்து வெளிவரும் பகீர் உண்மைகள்…

Published

on

தற்பொழுதெல்லாம் நித்யானந்தாவை பற்றிதான் அதிக திடுக்கிடும் தகவல் வெளிவந்து கொண்டு இருக்கின்றது அது போலவே தற்பொழுதும் ஒரு ஆச்சி தகவல் கனடா நாட்டை சேர்ந்தவர் சாரா ஸ்டெப்னீ லாண்ட்ரே. நித்யானந்தா ஆசிரமத்தில் நிர்வாகியாக இருந்த இவர் வெளிநாடுகளின் போதனைகளுக்கு செல்லும் நித்யானந்தாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டார்.  கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் ஆன்மிகத்தின் பக்கம் திரும்பினார். இந்து மதத்தின் மீதான ஈர்ப்பால் 2015-ஆம் ஆண்டு பிடதி ஆசிரமத்திற்கு வந்த சாரா ஸ்டெப்னீ லாண்ட்ரே ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா என்ற பெயருடன் அங்கேயே தங்க ஆரம்பத்தார். ஆசிரமத்தில் ஆன்மிக தொண்டு செய்வோருக்கு வழங்கப்படும் பெயரைப் போலவே சாராவும், மா நித்யா சுதேவி என்று அழைக்கப்பட்டு வந்தார்.

ஆசிரமத்தில் சேர்ந்த சாரா ஆரம்ப காலங்களில் சிஷ்யையாக இருந்தார். அதன் பின் அவருக்கு படிப்படியாக பல்வேறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டதால், பிடதி ஆசிரமம் மற்றும் நித்தியானந்தாவின் சமூக வலைத்தள கணக்குகளை எல்லாம் பராமரிக்கும் பொறுப்புகள் சாராவுக்கு கொடுக்கப்பட்டது.இதனால் ஆசிரமத்தில் உள்ள அனைவரின் நம்பிக்கையை பெற்ற சாரா கடந்த 2018-ல் நித்யானந்தா மூலம் பல கசப்பான நிகழ்வுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.நித்யானந்தாவிடம் இருந்து பல்வேறு ஆபாசமான குறுந்தகவல்கள் மட்டுமின்றி பல ஆபாசப் படங்களும் வந்ததாகவும், முதலில் அதிர்ந்து போன சாரா, ஒருவேளை தவறுதலாக வந்திருக்கலாம் என நினைத்து அதை தவிர்த்துள்ளார்.

Advertisement

ஆன்மிக பிரசாரத்துக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஆசிரமத்துக்கு சாரா சென்ற போது அங்கு அதிர்ச்சி காத்துள்ளது. ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள் தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது குறித்து கண்ணீர் மல்க சாராவிடம் கூறியுள்ளனர். இதை பார்த்து அதிர்ந்து போன சாரா, இது குறித்து ரஞ்சிதா மற்றும் நித்யானந்தாவிடம் கேள்விகள் எழுப்பியதோடு, ஆசிரமத்தை விட்டு வெளியேறி இருக்கிறார். தான் கர்நாடக மாநிலம் ராம்நகர் காவல் நிலையத்தில் 20 பக்கங்கள் கொண்ட பரபரப்பான புகார் மனுவை அளித்திருக்கிறார் சாரா.

அதில் நித்யானந்தா தன்னிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டதாகவும், ஆன்மீகம் என்ற பெயரில் அவர் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள் உள்ளிட்டோரிடம் அத்துமீறுவதாக குறிப்பிட்டுள்ளார்.இதற்கு முன் நித்தியானந்தா மீது பாலியல் புகார் வந்த போது அவர் ஆண்மை இல்லாதவர் என கூறி வழக்கை திசை திருப்பியது முற்றிலும் பொய் என கூறியுள்ள சாரா, பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடும் திறன் அவருக்கு இருப்பதாக கூறியிருக்கிறார். ஆசிரமத்தில் இருப்பவர்களை வசியம் செய்து அவர் மீது எந்த புகாரும் அளிக்காத படி சூழ்ச்சி வலை செய்து வைத்திருப்பதாகவும், இந்து மதத்தின் பெயரால் அவர் செய்யும் இதுபோன்ற காரியங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in