LATEST NEWS
யூடியூபில் வந்த மரண செய்தி…. பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து நடிகர் பார்த்திபன் போட்ட பதிவு…. என்ன சொன்னார் தெரியுமா….????

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் பார்த்திபன்.இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த வருடம் இயக்கிநடித்த ஒத்த செருப்பு திரைப்படம் மக்களின் மனதை வெகுவாக வென்று நல்ல ஹிட் கொடுத்தது.
இந்நிலையில் நேற்று நடிகர் பார்த்திபன் இறந்துவிட்டார் என்று ஒரு செய்தி யூடியூபில் வைரலானது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் தனது twitter பக்கத்தில், நொடிகள் மரணம் அடைவதும், மறுபடியும் அடுத்தடுத்தாய் உயிர்த்தெழுவதும் இயற்கை, நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலம் ஆவதன் காரணம் என்ன என்று புரியவில்லை, இது போன்ற செய்திகளை பரப்ப சில நண்பர்கள் இருக்கிறார்கள் என்று அவர் பதிவிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நொடிகள் மரணமடைவதும்,மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! Negativity-ஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம்! https://t.co/JmQqrxFL9K
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 23, 2023