TRENDING
டியூஷனுக்கு வந்த 6-வயது சிறுமி… “ஆசிரியையின் கணவர் செய்த கொடூரம்”…நம்பித்தானே அனுப்பினோம்..’ஆவடியில் நடந்த பரப்பரப்பு’!

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியில் வசிக்கும் தம்பதிகள் நரேஷ் மற்றும் விஜயலக்ஷ்மி இதில் கணவர் நரேஷ் ஆட்டோ ஓட்டிவருகிறார். மனைவி விஜயலக்ஷ்மி தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
மேலும் அப்பகுதியில் இருக்கும் மாணவர்களுக்கு விஜயலக்ஷ்மி டியூஷன் எடுத்துவருகிறார். அப்போது டியூஷனில் தனியாக இருந்த 6 வயது சிறுமியிடம் ஆசிரியை கணவரான நரேஷ் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் பயத்தில் அந்த சிறுமி மிரண்டுபோய் அழுத்துள்ளார்.
பின்னர் இதனையறிந்த ஆசிரியை விஜயலக்ஷ்மி நடந்ததை மறைத்துள்ளார். தங்கையின் அலறல் சத்தம் கேட்ட அண்ணன் வந்துள்ளார். சிறுமி தனக்கு நடந்ததை கூறியுள்ளார். உடனே அண்ணன் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார். அவர்கள் ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து ஆசிரியை மற்றும் அவரின் கணவர் தலைமறைவானார். தீவிர தேடுதல் வீதியில் இறங்கிய போலீசார் இருவரும் பூந்தமல்லியில் உள்ள தனது உறவினர்கள் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.பின் அவர்களை போக்சோ சட்டத்தின் கீழ்கைது செய்தனர்.
இந்த கொடூர சம்பவமானது ஆவடி பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.