TRENDING
மனைவியின் நடத்தை சரியில்லை… ‘3 நண்பர்களை அனுப்பிய கணவன்’..! 3 வருடத்திற்கு… “பின்னர் வெளிவந்த பகீர் தகவல்”…?

புதுக்கோட்டை மாவட்டம் பள்ளி விடுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் அருகிலுள்ள ஆலங்குடியை சேர்ந்த சரண்யா என்றவருக்கு கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இந்த தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் உள்ளது. தீடிர் என்று மனைவி சரண்யா கடந்த 2017ம் ஆண்டு முதல் காணவில்லை இதனையடுத்து பெற்றோர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர்.
அதனையடுத்து போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டனர் எந்தவித பலனும் கிடைக்கவில்லை இதனையடுத்து இந்த வழக்கு CBCID யிடம் மாற்றப்பட்டது அவர்கள் விசாரணைக்காக கணவர் ரமேஷை வரவழைத்தனர். CBCID போலீசார் ரமேஷியிடம் கேட்ட கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.மேற்கொண்டு விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது அதில் தன் மனைவி சரண்யா நடத்தை சரியில்ல அவளுக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்துவந்தது.
அதனால் என் நண்பர்களிடம் ஆளுக்கு ஒரு லட்சம் கொடுத்து என் மனைவியை கொலை செய்ய சொன்னேன் அவர்களும் கொலை செய்துவிட்டு ஊர் எல்லையில் உள்ள பாழும் கிணற்றி வீசினார்கள். பின்னர் போலீசார் சமபவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த கிணற்றில் இருந்த எலும்பு கூடுகளை ஆய்வு செய்ததில் அது சரண்யாவின் எலும்பு கூடு தான் என்று நிரூபிக்கப்பட்டது.
பின்னர் கணவர் ரமேஷ் மற்றும் அவரின் மூன்று நண்பர்கள் என அனைவரையும் கைது செய்தனர்.