LATEST NEWS
பகீர்! நள்ளிரவில் ஆடைகளைக் களைந்து ஓடிய பெண் ஐடி ஊழியர்… அம்மன் சிலையோடு ஏரியில்… நடந்தது என்ன.? நெஞ்சை உறையவைக்கும் சம்பவம்…!!
ஹைதராபாத்தில் ஐடி துறையில் பணியாற்றி வந்த தேஜஸ்வினி என்ற பெண், நள்ளிரவு நேரத்தில் தனது ஆடைகளைக் களைந்து திடீரென நிர்வாணமாக வீதியில் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த திக் திக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மனதளவில் கடுமையான பாதிப்பு அல்லது மன உளைச்சலுக்கு ஆளாகி அவர் இவ்வாறு நடந்துகொண்டாரா என்ற கோணத்தில் தகவல்கள் வெளியாகின.
ஆடைகளின்றி ஓடிய தேஜஸ்வினி, வழியில் இருந்த ஒரு கோயிலுக்குள் திடீரெனப் புகுந்துள்ளார். அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த அம்மன் சிலையை கைகளில் தூக்கிக்கொண்டு மீண்டும் வீதியில் ஓடிய அவர், அருகில் இருந்த ஏரியை நோக்கிச் சென்றுள்ளார். அங்கு வந்திருந்தவர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரைத் தடுக்க முயல்வதற்குள், கையில் சிலையுடன் ஏரி நீரில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், ஏரியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தேஜஸ்வினியின் உடலைக் கைப்பற்றினர். உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஒரு ஐடி ஊழியர் நள்ளிரவில் ஏன் இப்படி ஒரு தீவிர முடிவை எடுத்தார், மனநலப் பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
