LATEST NEWS
“நேசிக்கிறோம்” கண்ணீருடன் மைதானத்திலேயே உடைந்த மெஸ்ஸி.. அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் மகுடம் சூடிய ஸ்பெயின்.. உலகமே உறைந்த சோக நிமிடம்..!!
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் மைதானத்தில் நடைபெற்ற 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், அர்ஜென்டினா அணியைக் கூடுதல் நேர ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது. ஆட்டத்தின் வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் ரெட் கார்டு பெற்று வெளியேறியதால் அர்ஜென்டினா அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இந்த பலவீனத்தைப் பயன்படுத்திய ஸ்பெயின் அணி, கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோலை அடித்து 2-ஆவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. வெற்றி பெற்ற ஸ்பெயின் அணிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகக் கோப்பையை வழங்கிக் கௌரவித்தார்.
மறுபுறம், இந்தத் தோல்வியின் மூலம் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை அர்ஜென்டினா அணி இழந்தது. உலகக் கோப்பையில் தனது கடைசிப் போட்டியில் விளையாடிய அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, ரன்னர்-அப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்ட பின் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு உடைந்து அழுதது உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மெஸ்ஸியின் இந்தத் நெகிழ்ச்சியான விடைபெறுதலைத் தொடர்ந்து, அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கள் கேப்டனே, உங்களுடைய கண்ணீர் எங்களின் கண்ணீர்! எங்களின் வாழ்நாளின் மிகச்சிறந்த மகிழ்ச்சியை நீங்கள் தந்துள்ளீர்கள், உங்களை எப்போதும் நேசிக்கிறோம்” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளது. 2022 உலகக் கோப்பை மற்றும் கோபா அமெரிக்கா பட்டங்களை வென்று தந்த மெஸ்ஸியின் சர்வதேச சகாப்தம் ஒரு சோகமான இறுதியை எட்டியுள்ளது.
இந்தத் தொடரில் லியோனல் மெஸ்ஸி மொத்தம் 8 கோல்கள் மற்றும் 4 அசிஸ்ட்களுடன் போட்டியை நிறைவு செய்த நிலையில், இறுதிப்போட்டியில் அவரால் கோல் எதுவும் அடிக்க முடியாமல் போனது. இதனால், பிரான்ஸ் அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே மொத்தம் 10 கோல்களை அடித்து, தனது வாழ்க்கையின் இரண்டாவது ‘கோல்டன் பூட்’ விருதைத் தட்டிச் சென்றார். இதன் மூலம், ஒன்றுக்கும் மேற்பட்ட உலகக் கோப்பை கால்பந்து தொடர்களில் அதிக கோல் அடித்த வீரர் என்ற புதிய சாதனையையும், பெருமையையும் எம்பாப்பே படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
