LATEST NEWS
1 இல்ல 2 இல்ல மொத்தம் 500 பேர்… அதிமுகவிற்கு அடுத்த ஆப்பு… சிவி சண்முகம் ஆதரவாளர்கள் எடுத்த அதிரடி முடிவு..!!
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவிலிருந்து 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒட்டுமொத்தமாகக் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் முக்கியத் தலைவருமான சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளர்களான இந்த முக்கிய நிர்வாகிகள், தங்களது விலகல் கடிதத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வழங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மாவட்ட, ஒன்றிய, நகர உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகள் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதால், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் கட்சி கட்டமைப்பு பெருமளவில் வலுவிழக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். உட்கட்சிப் பூசல் மற்றும் அதிருப்தி காரணமாக இந்த ஒட்டுமொத்த விலகல் அரங்கேற உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
