“அம்மா அப்பா பிரிஞ்சிட்டாங்க…” வேதனையில் தவித்த பிளஸ்-2 மாணவி…. கடைசியில் நடந்த சோகம்…. கதறும் குடும்பத்தினர்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அம்மா அப்பா பிரிஞ்சிட்டாங்க…” வேதனையில் தவித்த பிளஸ்-2 மாணவி…. கடைசியில் நடந்த சோகம்…. கதறும் குடும்பத்தினர்…!!

Published

on

சேலம் களரம்பட்டி பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் மணிகண்டன் என்பவரின் மகள் விஜயலட்சுமி (17). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார். குடும்ப தகராறு காரணமாக மணிகண்டனுக்கும் அவரது மனைவி கலைச்செல்விக்கும் இடையே தொடர்ந்து சண்டைகள் ஏற்பட்டு வந்ததால், கலைச்செல்வி தன் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். தந்தை மணிகண்டனுடன் வசித்து வந்த மாணவி விஜயலட்சுமி, தனது பெற்றோர் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்த சூழலால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, பெரும் சோகத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் விஜயலட்சுமி தனது வீட்டின் அறையை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு, அங்கிருந்த ஜன்னல் கம்பியில் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு பதறிப்போன தந்தை மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் சடலமாகக் கிடந்ததைக் கண்டு கதறி அழுதனர். இக்கோரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த கிச்சிப்பாளையம் காவல் துறையினர், மாணவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தத் தற்கொலை மரணம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in