LATEST NEWS
“அம்மா இல்லை.. அக்கா இல்லை”.. கதறித் துடித்த சிறுவன்!.. குடும்பத் தகராறால் நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சோகம் சம்பவம்..!!
தெலுங்கானா மாநிலத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள சேவெல்லா பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, வசந்தா என்ற பெண் தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த கொடூர சம்பவத்தில் தாய் வசந்தாவும், அவரது மகள் நவ்யாவும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக, அவர்களின் 10 வயது மகன் வருண் மட்டும் உயிர் தப்பி கரையேறினான்.
‘అమ్మ లేదు.. అక్క లేదు..’ అంటూ బాలుడి రోదన
చేవెళ్లలో కుటుంబ కలహాలతో వసంత అనే మహిళ తన ఇద్దరు పిల్లలతో కలిసి బావిలో దూకింది. తల్లి వసంత, అక్క నవ్య మరణించగా.. ప్రాణాలతో బయటపడిన 10 ఏళ్ల బాలుడు వరుణ్ చేసిన రోదన స్థానికులను కన్నీటిపర్యంతం చేసింది. వారి మృతదేహాల వద్ద కూర్చొని “అమ్మ… pic.twitter.com/3iDdFTbS3Q— BIG TV Breaking News (@bigtvtelugu) July 17, 2026
தனது கண் முன்னாலேயே தாயையும் சகோதரியையும் இழந்த வருண், அவர்களின் உடல்களுக்கு அருகில் அமர்ந்து, “அம்மா இல்லை.. அக்கா இல்லை..” என்று கதறி அழுதது பார்ப்போரின் நெஞ்சை உலுக்கியது. அந்த சிறுவனின் தீராத துயரமும், கண்ணீரும் அங்கு கூடியிருந்த ஒட்டுமொத்த பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
