LATEST NEWS
BREAKING: நான் ஒன்னும் ஓடி ஒழியல… ஆனால்… போலீசுக்கு செந்தில் பாலாஜி அனுப்பிய அதிரடி கடிதம்..!!
குதிரை பேரம் தொடர்பாக தன் மீது எந்தவொரு முறையான வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில், எதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக முடியும் என்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அவர் நேரில் ஆஜராகாத சூழலில், தானும் தனது சகோதரரும் எங்கும் ஓடி ஒளியவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி காவல்துறைக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குதிரை பேரம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் செந்தில் பாலாஜி முற்றிலும் மறுத்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறையின் விசாரணைக்குத் தான் அளித்துள்ள விளக்கங்கள் அனைத்தும் முழுமையாகச் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே அமைந்துள்ளன என்றும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
