“இப்படியும் ஒரு பொம்பளையா?!”.. தோழியை கணவனுக்கு விருந்தாக்கி வீடியோ எடுத்த சைக்கோமனைவி.. மிரட்டி பணம் பறித்த கொடூரம்.. நெஞ்சை நடுங்க வைக்கும் பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“இப்படியும் ஒரு பொம்பளையா?!”.. தோழியை கணவனுக்கு விருந்தாக்கி வீடியோ எடுத்த சைக்கோமனைவி.. மிரட்டி பணம் பறித்த கொடூரம்.. நெஞ்சை நடுங்க வைக்கும் பயங்கரம்..!!

Published

on

வேலூரில் ஜிம் நடத்தி வரும் 35 வயது பெண் ஒருவருக்கு எப்சிபா என்ற பெண் பழக்கமாகியுள்ளார். தனது மகனின் பிறந்தநாள் விழாவிற்கு வருமாறு எப்சிபா அழைத்ததன் பேரில், அந்த ஜிம் உரிமையாளரும் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து, எப்சிபாவின் கணவர் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த அருவருக்கத்தக்க செயலை எப்சிபா தனது கைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களாகப் பதிவு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களைக் காட்டி மிரட்டி, அந்தப் பெண்ணிடமிருந்து அவர்கள் தொடர்ந்து பணம் பறித்து வந்துள்ளனர். பாலியல் அத்துமீறல் மற்றும் பணப்பறிப்பால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தற்போது எப்சிபா மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in