BREAKING: நடிகர் விமலுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை… சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!! – cinefeeds
Connect with us

CINEMA

BREAKING: நடிகர் விமலுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை… சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!!

Published

on

ரூ.4.5 கோடி காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு சென்னை நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. நடிகர் விமல் தயாரித்து நடித்த ‘மன்னர் வகையறா’ திரைப்படத்திற்காக, சினிமா பைனான்சியர் கோபி என்பவரிடம் ரூ.4.5 கோடி கடனாகப் பெற்றிருந்தார். படம் வெளியான பிறகும் கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலையில், அதற்குப் பதிலாக அவர் கொடுத்த காசோலை (Cheque) வங்கியில் கணக்கில் பணமில்லாமல் திரும்பியது. இதனைத் தொடர்ந்து பைனான்சியர் கோபி சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், விமலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் இந்த ஓராண்டு சிறை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக விமல் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. விமல் தரப்பு நீதிமன்றத்தில் மனு அளித்ததை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசத்தை வழங்கி, அதுவரை விமலுக்கான சிறை தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த நீண்ட நாள் பண மோசடி வழக்கில் சென்னை நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள இந்த அதிரடி உத்தரவு, தமிழ் திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in