‘நாம ஜெயிச்சிட்டோம் மாறா..!’ அமைச்சர் விலகியதால் சோஷியல் மீடியாவை தெறிக்கவிடும் Gen Z..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘நாம ஜெயிச்சிட்டோம் மாறா..!’ அமைச்சர் விலகியதால் சோஷியல் மீடியாவை தெறிக்கவிடும் Gen Z..!!

Published

on

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், NEET-UG தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு சர்ச்சைகளைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் சமர்ப்பித்துள்ளார். தேர்வு அமைப்பின் மீதான மாணவர்களின் கவலையைக் கருத்தில் கொண்டும், மாணவர்களின் எதிர்காலம் சட்டச் சிக்கல்களில் சிக்கக்கூடாது என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ‘Gen Z’ எனப்படும் இளம் தலைமுறை மாணவர்கள், கல்வித் துறையில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் வேண்டும் என வலியுறுத்தித் தீவிரப் போராட்டங்களை நடத்தி வந்தனர். அமைச்சரின் ராஜினாமா செய்தி வெளியானதுமே, “Gen Z சாதித்துக் காட்டிவிட்டது” என்ற கொண்டாட்டங்களுடன் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

Advertisement

இளம் தலைமுறையினரின் இந்த அமைதியான மற்றும் உறுதியான போராட்டத்தின் வெற்றிக்கு, சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பல பிரபலங்களும் பொதுமக்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். மாணவர் சக்தியின் ஒற்றுமையையும் ஜனநாயக வழியிலான போராட்டத்தின் வலிமையையும் இந்நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in