பகீர்..! ஒரு நொடி ஆத்திரம்… வாழ்க்கையே போச்சு..! பொண்டாட்டியோடு சண்டையிட்டு உடம்பில் தீ வைத்துக்கொண்ட கணவன்… வலியால் தாங்க முடியாமல் கதறியபடி வீதியில் ஓட்டம்..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர்..! ஒரு நொடி ஆத்திரம்… வாழ்க்கையே போச்சு..! பொண்டாட்டியோடு சண்டையிட்டு உடம்பில் தீ வைத்துக்கொண்ட கணவன்… வலியால் தாங்க முடியாமல் கதறியபடி வீதியில் ஓட்டம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் உள்ள ஹுசைனி பள்ளிவாசலில் முஅத்தினாகப் பணியாற்றி வரும் நபர் ஒருவர், தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். ஜூலை 30 அன்று, அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப விஷயம் தொடர்பாகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்திலேயே எல்லை மீறிச் சென்று, இருவருக்கும் இடையே பெரும் மோதலாக மாறியுள்ளது.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் மன உளைச்சலும் ஆத்திரமும் அடைந்த அந்த நபர், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றித் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியதும் வலியால் தாங்க முடியாமல் கதறியபடி அவர் வீதியில் ஓடிவந்துள்ளார். உடலில் தீப்பற்றி எரிய அலறியபடி ஓடிவந்த பேரதிர்ச்சியைக் கண்டு அப்பகுதி மக்கள் உறைந்துபோயினர்.

Advertisement

உடனடியாகச் செயல்பட்ட அக்கம் பக்கத்தினர், போர்வைகளைப் போர்த்தித் தீயை அணைத்து, அவரை ஆபத்தான நிலையில் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குடும்பத் தகராறுக்கான பின்னணி குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in