LATEST NEWS
டாஸ்மாக் வழக்கில் திடீர் திருப்பம்.. உதயநிதியின் நண்பர் கைது..? இரவோடு இரவாக தயாரான DVAC-ன் ரகசிய திட்டம்… அறிவாலயத்தை உலுக்கும் பரபரப்புத் தகவல்கள்..!!
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் ரத்தீஷ் என்பவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவரான ரத்தீஷ், டாஸ்மாக் அதிகார அமைப்பில் செல்வாக்கு செலுத்தி முறைகேடுகளுக்கு உறுதுணையாக இருந்தார் எனத் தக்க ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
விரைவில் தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்குள்ளாகவே ரத்தீஷைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துப் புயலைக் கிளப்பக் கூடும் என்பதால், இந்தத் திடீர் நடவடிக்கை ஆளுங்கட்சியான திமுகவிற்கும் குறிப்பாகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் பெரும் அரசியல் நெருக்கடியையும் சவாலையும் ஏற்படுத்தியுள்ளது.
