இப்படியொரு மருமகளா..? மாமியார் இறந்த அதிர்ச்சி… காரில் ஏறும்போது சுருண்டு விழுந்து உயிரிழந்த மருமகள்… கோவையில் நெஞ்சை உருக்கும் சோகம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இப்படியொரு மருமகளா..? மாமியார் இறந்த அதிர்ச்சி… காரில் ஏறும்போது சுருண்டு விழுந்து உயிரிழந்த மருமகள்… கோவையில் நெஞ்சை உருக்கும் சோகம்..!!

Published

on

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பாருகுட்டி (86) என்ற முதியவர் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இச்செய்தியை அறிந்த நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசித்து வந்த அவரது மருமகள் சாந்தா (65), மாமியாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உடனடியாகக் கோவைக்குக் கிளம்பியுள்ளார்.

அப்போது காரில் ஏற முயன்றபோது, மாமியாரின் மறைவு ஏற்படுத்திய தீவிர அதிர்ச்சி மற்றும் துயரம் காரணமாகச் சாந்தா திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாமியார் மீது கொண்ட அளவுகடந்த பாசத்தால் மருமகளும் உயிரை விட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், இருவரது உடல்களும் ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in