“பாதுகாக்க வேண்டியவரே வேட்டையாடினால்?.. விசாரணை என்ற பெயரில் தனியாக அழைத்து காவலர் செய்த பகீர் காரியம்.. 23 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… கோவையை உலுக்கிய சம்பவம்”..!! – cinefeeds
Connect with us

CRIME

“பாதுகாக்க வேண்டியவரே வேட்டையாடினால்?.. விசாரணை என்ற பெயரில் தனியாக அழைத்து காவலர் செய்த பகீர் காரியம்.. 23 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… கோவையை உலுக்கிய சம்பவம்”..!!

Published

on

கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட துடியலூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரியும் வினோத்குமார், கடந்த 15ஆம் தேதியன்று வெள்ளக்கிணறு வீட்டு வசதி வாரியப் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்தபோது தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். அங்கு ஆண் நண்பருடன் இருந்த 23 வயது இளம்பெண்ணை விசாரணை என்ற பெயரில் ஆள் அரவமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று, அவருக்குப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் நடந்தவற்றை கூறி கதறியதை அடுத்து, அவரது ஆண் நண்பர் இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் காவலர் வினோத்குமார் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் துடியலூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை நேற்று கைது செய்தனர். தமிழகத்தில் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், பாதுகாப்பு தர வேண்டிய காவலரே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்டுள்ள இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in