LATEST NEWS
“யாருடா இவன் புதுசா இருக்கான்…?!” கண்ணாடியில் தன் மூஞ்சியைப் பார்த்து குழம்பிப்போன பாம்பு..! அப்புறம் நடந்ததை நீங்களே பாருங்க..!!
பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலான மக்களுக்குப் பயம் ஏற்படுவது இயல்பு. உலகில் உள்ள பல நச்சுயிரினப் பாம்புகளின் விஷம் சில நிமிடங்களிலேயே மனித உயிரைப் பறிக்கும் ஆபத்து கொண்டதே இதற்கு முதன்மை காரணமாகும். எல்லாப் பாம்புகளும் விஷமுடையவை அல்ல என்றாலும், அவற்றின் அதிவேக நகர்வு, சுறுசுறுப்பு மற்றும் திடீர் தாக்குதல் நடத்தும் குணம் காரணமாக மக்கள் அவற்றைக் கண்டு விலகியே இருக்கின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் எப்போதும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது முதன்முறையாகக் கண்ணாடியின் முன் நிறுத்தப்படும் பாம்பு ஒன்றின் விசித்திரமான ரியாக்ஷன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு பெரிய கண்ணாடி மெதுவாகப் பாம்பின் எதிரே வைக்கப்படுகிறது. கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தவுடன் அந்தப் பாம்பு உடனடியாக எச்சரிக்கை அடைந்து விடுகிறது. சில வினாடிகள் கண் இமைக்காமல் தன் எதிரே தெரியும் பிம்பத்தையே அது உற்று நோக்குகிறது. பின்னர் தன் தலையையும் உடலையும் வெவ்வேறு திசைகளில் அசைத்து, எதிரே இருப்பது யார் என்பதைப் புரிந்துகொள்ள முயல்கிறது. தன் எதிரே மற்றொரு பாம்பு இருப்பதாக எண்ணியே அது ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாகக் கவனிப்பது போலத் தோன்றுகிறது. இந்த சுவாரசியமான வீடியோ இன்ஸ்டாகிராமில் @wildlife.clash என்ற கணக்கில் பகிரப்பட்டு, லட்சக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் பெற்று வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/DbVKckAhl-F/?utm_source=ig_web_button_share_sheet
மனிதர்களைப் போலக் கண்ணாடியில் தங்களது சொந்த பிம்பத்தை அடையாளம் காணும் திறன் பாம்புகளுக்குக் கிடையாது என்று விலங்கியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கண்ணாடியில் தன் எதிரே தெரியும் பிம்பத்தைப் பார்க்கும்போது, அது தன்னுடைய சொந்த நிழல் என்பதைப் பாம்புகளால் புரிந்துகொள்ள முடிவதில்லை. பெரும்பாலான நிகழ்வுகளில், அவை அந்த பிம்பத்தை மற்றொரு பாம்பாகவோ அல்லது தங்களுக்கு வரவிருக்கும் ஆபத்தாகவோ கருதுகின்றன. இதன் காரணமாகவே அவை தற்காப்பு நிலைக்குச் சென்று விடுகின்றன. சில பாம்புகள் சீறத் தொடங்குகின்றன, இன்னும் சில பாம்புகள் தாக்குதல் நடத்தாமல் எதிரே தெரியும் பிம்பத்தின் மீது தொடர்ந்து பார்வையப் பதித்து, அதன் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்கின்றன.
