LATEST NEWS
“அடடே… இது நல்லா இருக்கே..!” இனிமேல் எரேசர் தொலையவே தொலையாது..!இன்ஸ்டாகிராமை அலறவிட்ட தாயின் மாஸ்டர் பிளான்..!!
சமூக வலைதளங்களில் குழந்தைகளின் சுட்டித்தனங்களும், பெற்றோர் அவர்களுக்குச் செய்யும் எளிய தீர்வுகளும் இணையவாசிகளின் கவனத்தை அடிக்கடி ஈர்ப்பது உண்டு. அந்த வகையில், தனது மகன் அடிக்கடி பள்ளி எழுதுபொருட்களைத் தொலைத்து வருவதால் அதிருப்தியடைந்த தாய் ஒருவர், அதற்குத் தீர்வு காணக் கையாண்ட ஒரு சாதுர்யமான ‘தேசி ஜூகாட்’ உத்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
படிக்கும் போது அல்லது பள்ளிப் பயிற்சிகளைச் செய்யும் போது அந்தச் சிறுவன் பென்சில், ரப்பர் மற்றும் ஷார்ப்னர் போன்றவற்றைத் தவறவிட்டுத் தேடுவதிலேயே அதிக நேரத்தைச் செலவிட்டு வந்தான். இதனால் தாய் ஒரு மெல்லிய கயிற்றைப் பயன்படுத்தி, பென்சில், எரேசர் மற்றும் ஷார்ப்னர் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கட்டி, அச்சிறுவனின் கழுத்தில் மாட்டிவிட்டார். இதன் மூலம் பொருட்கள் கைநழுவி விழுவது தடுக்கப்பட்டு, சிறுவன் எந்த இடையூறுமின்றித் தன் பாடங்களைப் படிக்க முடிந்தது.
https://www.instagram.com/reel/DbKE89oTLqo/?utm_source=ig_web_button_share_sheet
தாயின் இந்த எளிய மற்றும் புத்திசாலித்தனமான யோசனை அடங்கிய வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு ஆயிரக்கணக்கானோரின் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிறுவனுக்கு எந்தச் சிரமமும் இன்றி அவன் வசதியாகப் படிப்பதைக் கண்ட இணையவாசிகள், தாயின் இந்தச் சமயோசித புத்தியையும் நேர மேலாண்மையையும் வெகுவாகப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
