CINEMA
CM விஜய் மகன் பேசியதை பார்த்து அழுதுட்டேன்.. அவங்களுக்குள்ள பிரச்சினை இருந்தாலும் பிள்ளைய எப்படி வளத்துருக்காங்க.. ஆனா எங்க குடும்பத்துல.. ஆர்த்தியின் தாயார் கண்ணீர்..!!
தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது அறிமுகத் திரைப்படமான ‘சிக்மா’ குறித்த சமீபத்திய நேர்காணலில், பெற்றோரிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வதந்திகள் பரவினாலும் அவர்கள் இருவரும் இணைந்து தனக்கு அளித்த முழு ஆதரவையும், தந்தை விஜய் மீது தனக்குள்ள பெருமையையும் மனம் திறந்து பேசினார். ஒரு கேள்விக்கு, “நான் ஹாலிவுட் சென்றால் அங்கேயும் என் அப்பாவைத்தான் உடன் அழைத்துச் செல்வேன்” என்று சஞ்சய் நெகிழ்ச்சியுடன் பதிலளித்திருந்தார். பெற்றோரின் தனிப்பட்ட வாழ்க்கையில் சலசலப்புகள் இருந்தாலும், பிள்ளைகளின் எதிர்காலத்தை அவர்கள் எத்தகைய முதிர்ச்சியுடன் வழிநடத்துகிறார்கள் என்பதை இந்த பேட்டி வெளிப்படுத்தியது.
இதை பாத்து நான் அழுதுவிட்டதாக ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் குன்றியுள்ளார். அதில் அவர் பாருங்க அவங்க அப்பாவ பத்தி எவ்ளோ பெருமையா பேசுறாரு. அவங்களுக்குள்ள பிரச்சன இருந்தாலும் பசங்கள எப்படி பாத்துக்குறாங்கனு பாருங்க ஆனா இங்க மறுபுறம், நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, மிகுந்த வேதனையோடு கண்ணீர் மல்க பேசினார். ஜேசன் சஞ்சய் தன் தந்தை குறித்து பெருமையாகப் பேசுவதைக் குறிப்பிட்டு, பிள்ளைகளைத் தங்களது குடும்பப் சண்டைகளுக்குள் இழுக்காமல் வளர்க்கும் பெற்றோரின் பொறுப்பை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் தங்கள் குடும்ப விவகாரத்தில், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், குழந்தைகளின் அமெரிக்கப் பள்ளி கட்டணமான ஆண்டுக்கு 86 லட்சம் ரூபாயை ரவிதான் செலுத்த வேண்டும் என்றும், ஆர்த்தி மற்றும் குழந்தைகளுக்கு மாதப் பராமரிப்புத் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குழந்தைகளுக்குச் சாப்பாட்டிற்குக் கூட அவர் பணம் தரவில்லை என்றும், கடன் கட்டாததால் வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ் வந்ததாகவும் குற்றம் சாட்டினார். தங்களுக்குள் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருந்தாலும், குழந்தைகளைப் பார்க்க ரவியை தாங்கள் எப்போதும் தடுக்கவில்லை என்று கூறிய சுஜாதா, எந்தவொரு பெற்றோருக்கும் தங்களுக்கு நேர்ந்தது போன்ற அவல நிலை வரக்கூடாது என அழுதுகொண்டே வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
