LATEST NEWS
ஒரே இரவில் கோடீஸ்வரி… வங்கிக் கணக்கில் ரூ.99,99,99,997… கேஸ் மானியம் சரிபார்க்க சென்ற பெண்ணுக்குக் காத்திருந்த மெகா அதிர்ச்சி..!!
மேற்கு வங்க மாநிலம் தெற்கு பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மனைவி காஷ்மிரா. இவர் தனது வங்கிக் கணக்கில் மத்திய அரசின் கேஸ் சிலிண்டர் மானியத் தொகை வந்துள்ளதா என்பதைச் சரிபார்ப்பதற்காக அண்மையில் வங்கிக்குச் சென்றுள்ளார். அப்போது தனது கணக்கில் சுமார் 100 கோடி ரூபாய் (ரூ.99,99,99,997) வரவு வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.
இந்தத் தகவல் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, வங்கிக் கணக்கில் இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வங்கியின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தவறு நடந்திருக்கலாம் என்று முதற்கட்டமாக சந்தேகிக்கப்படும் நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
