“நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்..!” 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை… பிறப்புறுப்புகள் சிதைக்கப்பட்டு கொடூரக் கொலை.. உலக்கையை உலுக்கிய சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்..!” 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை… பிறப்புறுப்புகள் சிதைக்கப்பட்டு கொடூரக் கொலை.. உலக்கையை உலுக்கிய சம்பவம்..!!

Published

on

அஸ்ஸாம் மாநிலம் ஹைலாகண்டி மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் வீட்டில் நடந்த விருந்தில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பின் இரவு 10:30 மணிக்குத் தனியாக வீட்டிற்குச் சென்ற சிறுமி, ஒரு மணி நேரம் கழித்துக் குடும்பத்தினர் வந்து பார்த்தபோது சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் பிறப்புறுப்புகள் மற்றும் உடல் பாகங்கள் பல்வேறு பொருட்களைக் கொண்டு கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டிருந்த நிலையில், கிராம மக்கள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரி அஸ்ஸாம் – மிசோரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 17 முதல் 19 வயதுக்குட்பட்ட மூன்று பேரை அஸ்ஸாம் காவல்துறை கைது செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் அமைத்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 17.5 வயதுடைய ஒருவரை, குற்றத்தின் கொடூரத் தன்மையைக் கருத்தில் கொண்டு வயது வந்தவராகக் கருதி விசாரிக்க நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகக் காவல் கண்காணிப்பாளர் அமிதாப் சின்ஹா தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கான சரியான நோக்கம் இன்னும் கண்டறியப்படாத போதிலும், கைது செய்யப்பட்டவர்கள் சிறுமிக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதும், அவரது வீட்டைப் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. சிறுமிக்கும் அவர்களுக்கும் இடையே இருந்த தகவல்தொடர்புகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கைபேசிகளை மையமாகக் கொண்டு காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in