LATEST NEWS
“திக் திக்..! ரயில் பெட்டியில் சிவப்பு நிற சூட்கேஸ்… திறந்து பார்த்த போலீசுக்கு காத்திருந்த பயங்கரம்.. தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் அரங்கேறிய கொடூரம்..!!
சென்னையிலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாட்டின் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில், சிவப்பு நிற டிராளி பேக் ஒன்றுக்குள் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டெடுக்கப்பட்ட உடலின் தலை மற்றும் சில உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டு மாயமாகியிருந்ததும், அந்த உடல் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டிருந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பிளாஸ்டிக் கவரில் சென்னையோடு தொடர்புடைய ஒரு காகிதச் சீட்டு இருந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் அனைத்துக் கோணங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
🚨 తమిళనాడు ఎక్స్ప్రెస్లో ట్రాలీ బ్యాగ్లో మృతదేహం కలకలం
🔹 చెన్నై నుంచి ఢిల్లీకి వెళ్తున్న తమిళనాడు ఎక్స్ప్రెస్ జనరల్ బోగీలో ఎర్ర రంగు ట్రాలీ బ్యాగ్లో ఓ మృతదేహాన్ని గుర్తించారు.
🔹 మృతదేహానికి తలతో పాటు కొన్ని శరీర భాగాలు లేకపోవడం, పాలిథిన్లో చుట్టి ఉండడం కలకలం రేపింది. ఆ… pic.twitter.com/5heAUAjHtO— ముచ్చట్లు | Stories • Voices • Views (@muchatlu_) August 5, 2026
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ரயில்வே காவல்துறை, அந்த டிராளி பேக்கைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ரயிலில் கொடூரமான முறையில் சடலத்தை வைத்துச் சென்ற மர்ம நபர்கள் யார் மற்றும் கொல்லப்பட்ட நபர் யார் என்பது குறித்தும் சென்னை மற்றும் வழிநெடுகிலும் உள்ள ரயில் நிலையங்களின் கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அதிகாரிகள் முதற்கட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
