என்ன கொடுமை இது..! பள்ளி வளாகத்திலேயே மலம் கழித்து மாணவர்களைச் சுத்தம் செய்ய வைத்த தலைமையாசிரியர்… நோட்டீஸ் அனுப்பி கல்வித்துறை அதிரடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன கொடுமை இது..! பள்ளி வளாகத்திலேயே மலம் கழித்து மாணவர்களைச் சுத்தம் செய்ய வைத்த தலைமையாசிரியர்… நோட்டீஸ் அனுப்பி கல்வித்துறை அதிரடி..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில் உள்ள ஹர்டுவா கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட அமுவா தோலா அரசு தொடக்கப் பள்ளியில், சமைலால் கோல் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு மதுபோதையில் வந்து பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாக, அங்கு பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் நீண்ட நாட்களாகக் புகார் தெரிவித்து வந்தனர்.

பெற்றோர்களின் புகாரைத் தொடர்ந்து, கிராம பஞ்சாயத்துத் தலைவர் ராமாவதார் கோல் மற்றும் ஊர் பொதுமக்கள் நேரடியாகப் பள்ளிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, தலைமை ஆசிரியர் தினமும் மது அருந்திவிட்டு வருவது உண்மைதான் என அம்மாணவர்கள் உறுதிப்படுத்தினர். மேலும், ஒருமுறை ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே மலம் கழித்துவிட்டு, அதைத் தங்களை விட்டுச் சுத்தம் செய்ய வைத்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். பஞ்சாயத்துத் தலைவர் பார்வையிட்ட போது, வகுப்பறைச் சுவர்கள் முழுவதும் ஆசிரியர் குட்கா மென்று துப்பிய கறைகளால் பாழாகியிருந்தது கண்டறியப்பட்டது. ஆசிரியர் தினமும் கடுமையான போதையில் இருப்பதால், அவரது குடும்பத்தினரே அவரைத் தினமும் காலையில் பள்ளியில் கொண்டு வந்து விட்டு, மாலையில் அழைத்துச் செல்வதாகப் பஞ்சாயத்துத் தலைவர் தெரிவித்தார்.

Advertisement

கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில், கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினர். விசாரணையைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் சமைலால் கோலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவரிடமிருந்து பதில் பெறப்பட்ட பிறகு, இடைநீக்கம் உள்ளிட்ட அடுத்தகட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in