என்ன மாற்றம்னு சொல்லாதீங்க..? “இதுதாங்க மாற்றம்” 10 நிமிடத்தில் தலைமைச் செயலகத்தில் நடந்த சம்பவம்… முதல்வர் விஜய் போட்ட உத்தரவு… நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத மாற்றுத்திறனாளிப் பெண்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன மாற்றம்னு சொல்லாதீங்க..? “இதுதாங்க மாற்றம்” 10 நிமிடத்தில் தலைமைச் செயலகத்தில் நடந்த சம்பவம்… முதல்வர் விஜய் போட்ட உத்தரவு… நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத மாற்றுத்திறனாளிப் பெண்..!!

Published

on

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த பிறகு நிர்வாகத்தில் என்ன மாற்றம் வந்துவிட்டது எனக் கேள்வி எழுப்புபவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான அனுபவப் பதிவு தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் தனது முக்கியக் கோரிக்கை தொடர்பாக மாலை 5:10 மணிக்கு அவர் மனு அளித்துள்ளார். மனு அளித்த அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே, அதாவது 5:14 மணிக்கு மனு பதிவு செய்யப்பட்டதற்கான குறுஞ்செய்தி (SMS) அவரது கைபேசிக்கு வந்து சேர்ந்துள்ளது.

Advertisement

அதனைத் தொடர்ந்து 5:20 மணிக்குள் மனுவிற்கான அதிகாரப்பூர்வ ஒப்புகைச் சீட்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதோடு நிற்காமல், அங்குப் பணியாற்றிய அரசு ஊழியர் ஒருவர், அடுத்தகட்ட நடவடிக்கைக்காகச் சம்பந்தப்பட்ட துறையின் மேலாண்மை இயக்குநரை உடனடியாக நேரில் சந்திக்குமாறு வழிகாட்டி உதவியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தவெக தலைவரான முதலமைச்சர் தெளிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அந்த ஊழியர் கூறியபோது, தான் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். மனு கொடுத்த சில நிமிடங்களிலேயே தீர்வுக்கான பாதை புலப்பட்டதாக அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள இந்தப் பதிவு, சமூக வலைதளங்களில் பலராலும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in