“ஐயோ பாவம்… சீறிப்பாயும் காட்டாற்று வெள்ளத்துல 7 மாத கர்ப்பிணியை சுமந்து போன மக்கள்… கடைசியில் கேட்ட அந்த செய்தி..! தெலங்கானாவில் நடந்த சோகம்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ பாவம்… சீறிப்பாயும் காட்டாற்று வெள்ளத்துல 7 மாத கர்ப்பிணியை சுமந்து போன மக்கள்… கடைசியில் கேட்ட அந்த செய்தி..! தெலங்கானாவில் நடந்த சோகம்..!!”

Published

on

தெலங்கானா மாநிலம் கேரமேரி மண்டலத்திலுள்ள ‘கொலாம் குடா’ என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்த கோடபா ரமேஷ்வரி என்ற 7 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது. இருப்பினும், பகுதியில் பெய்த கனமழையினால் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் சாலை இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் வர முடியாத சூழல் ஏற்பட்டதால், கிராம மக்கள் அனைவரும் இணைந்து அப்ப பெண்ணை மரக்கட்டையால் செய்யப்பட்ட ‘டோலி’யில் அமர்த்தி, சீறிப்பாயும் வெள்ளநீருக்கு நடுவே ஆபத்தான முறையில் சுமந்து சென்று ஓடையைக் கடக்க உதவினர்.

அங்கிருந்து அவர் சிகிச்சைக்காக கேரமேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்த குழந்தையின் அசைவு எதுவும் இல்லை என்பதைக் கண்டறிந்து, மேல் சிகிச்சைக்காக ஆசிஃபாபாத் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

Advertisement

இந்தச் சம்பவம் பருவமழை காலத்தில் மலைவாழ் கிராம மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதி பற்றாக்குறையை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. மழைக்காலத்தில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாலும், நிரந்தரப் பாலங்கள் மற்றும் தார்ச்சாலைகள் இல்லாததாலும் அவசர காலங்களில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் கிராமங்கள் துண்டிக்கப்படுகின்றன. எனவே, அசம்பாவிதங்களைத் தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக மருத்துவமனையை அடையவும் அனைத்துக் காலங்களுக்கும் ஏற்ற சாலை வசதிகளையும் பாலங்களையும் உடனடியாக அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in