LATEST NEWS
2 1/2 வயசு குழந்தையை பாலியல் வன்கொடுமை செஞ்சப்போ.. “துணை முதல்வராக இருந்தபோ நீங்க என்ன செஞ்சீங்க..?” உதயநிதியை நோக்கி கேள்வி எழுப்பிய ஆதவ் அர்ஜுனா..!!
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆதவ் அர்ஜுனா மற்றும் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, இரண்டரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட போது, துணை முதல்வராக இருந்த உதயநிதி ஸ்டாலின் என்ன பேசினார் என்றும், போதைப்பொருளுக்கு எதிராக அவர் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பிக் காகிதங்களை நீட்டினார். இதற்கு உதயநிதி ஸ்டாலினும் பேரவையில் நேரடியாகப் பதிலடி கொடுத்தார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கும் கேள்விகளுக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு எதிராக திமுகவினர் அவையின் நடுவே திரண்டு கோஷங்களை எழுப்பியதால், சட்டமன்றத்தில் பெரும் கூச்சலும் அமளியும் நிலவியது.
