CRIME
“தற்கொலையா அல்லது கொலையா..?” கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் மருத்துவர் சடலம்… திருமணமான 7 மாதத்தில் நிகழ்ந்த விபரீதம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டைச் சேர்ந்த 26 வயது மருத்துவர் குஷாலி, தனது ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவ மையத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல் இன்று காலையில் தனது வீட்டிலிருந்து கிளினிக்கிற்குப் புறப்பட்டுச் சென்ற டாக்டர் குஷாலியின் உடல், கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இருப்பினும், காவல்துறையினர் இச்சம்பவத்தைத் தற்கொலை வழக்காகப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மயங்க் சௌத்ரி என்பவரைத் திருமணம் செய்துகொண்ட குஷாலி, கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகத் தனது தாய்வழி வீட்டில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர் புதியதாகத் தொடங்கிய கிளினிக்கில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ள நிலையில், டெல்லியில் எல்லைப் பாதுகாப்புப் படையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் முறையான விசாரணைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
