CRIME
“அவ என் பொண்டாட்டி, விட்டுருங்க..” பட்டப்பகலில் துரத்தித் துரத்தி வெறிச்செயல்.. ரத்தவெள்ளத்தில் சரிந்த கூலித்தொழிலாளி.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
சென்னை புழல் அடுத்த காவாங்கரை 10-வது தெருவைச் சேர்ந்த ரத்தினவேலு (35), தனது மனைவி அம்முவுடன் வசித்து வந்த நிலையில், அவரது மச்சானின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தொடர்பைக் கைவிடுமாறு குடும்பத்தினர் பலமுறை எச்சரித்தும், அதனைப் பொருட்படுத்தாமல் ரத்தினவேலு தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் வேலைக்குச் செல்வதற்காகப் பாடியநல்லூர் வ.உ.சி. தெரு வழியாக அவர் நடந்து சென்றபோது, அவரது மச்சான்கள் வழிமறித்து கள்ளத்தொடர்பு குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரத்தினவேலுவைத் துரத்தித் துரத்திச் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் சாலையில் நடந்த இந்தத் திடுக்கிடும் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியது. இது குறித்துத் தகவலறிந்த செங்குன்றம் காவல் நிலையப் போலீசார் உடனடியாக விரைந்து சென்று உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
