BREAKING: அதிமுகவிலிருந்து விலகினார் முதல்வர் விஜய்யின் நண்பர்.. எடப்பாடிக்கு பயங்கர ஷாக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: அதிமுகவிலிருந்து விலகினார் முதல்வர் விஜய்யின் நண்பர்.. எடப்பாடிக்கு பயங்கர ஷாக்..!!

Published

on

அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த கே.ஏ.கிருஷ்ணசாமியின் மகனான முகில், அதிமுகவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த காலகட்டத்தில், கட்சியின் முக்கியப் பிரிவான ‘அம்மா பேரவை’யில் உயர் பொறுப்பு வகித்த முகில், தற்போது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் கட்சியை விட்டு விலகுவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தனது சொந்தக் காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகியுள்ள முகில், விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக் கூடும் என அரசியல் வட்டாரங்களில் பலத்த வதந்திகள் பரவி வருகின்றன. தற்போதைய முதலமைச்சர் விஜய் சென்னை லயோலா கல்லூரியில் பயின்ற போது, முகிலும் அவருடன் அதே கல்லூரியில் படித்த நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரி காலத்துத் நட்பின் அடிப்படையிலும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டும், அவர் தவெகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடர அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in